சஞ்சய் மல்ஹோத்ரா  
தற்போதைய செய்திகள்

'ரெப்போ ரேட்' வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி

வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பை: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார்.

ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு சில்லறை பணவீக்க கணிப்பை 3.7% இருந்து 3.1% ஆக திருத்தியுள்ளது ரிசர்வ் வங்கி.

'ரெப்போ ரேட்' எனும் வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. ரெப்போ ரேட் விகிதம் 5.5 சதவிகிதமாகவே தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நிதிக்கொள்கைக் குழு கூட்டம் நடைபெறும். அதன்படி, மும்பையில் நடைபெற்ற கூட்டத்துக்குப் பின்னர் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், ரெப்போ ரேட் விகிதம் 5.5 என்ற அளவிலும், இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது என்றார்.

"நடப்பு 2025-26 நிதியாண்டிற்கான பணவீக்கம் இப்போது 3.1 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்ட 3.7 சதவீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க குறைவு."

சில்லறை பணவீக்கம் தொடர்ந்து எட்டாவது மாதமாக குறைந்து, ஜூன் மாதத்தில் 77 மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.1 சதவீதத்தை எட்டியது. எரிபொருள்கள் மீதான பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாக குறைந்து, ஜூன் மாதத்தில் 2.6 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், முக்கிய பணவீக்கம் ஜூன் மாதத்தில் 4.4 சதவீதமாக சற்று உயர்ந்தது, பிப்ரவரி மற்றும் மே மாதங்களுக்கு இடையில் பதிவான 4.1 சதவீதத்திலிருந்து 4.2 சதவீதமாக இருந்தது, இதற்கு பெரும்பாலும் தங்க விலையில் ஏற்பட்ட தொடர்ச்சியான அதிகரிப்பு காரணமாகும்.

இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டிலும் அதற்குப் பிறகும் பணவீக்கம் 4 சதவீதத்துக்கு மேல் உயரும் என்றும், முக்கிய பணவீக்கம் ஆண்டு முழுவதும் 4 சதவீதமாக நிலையாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி எதிர்பார்க்கிறது. வானிலை தொடர்பான அதிர்ச்சியான தகவல்கள் பணவீக்கக் கண்ணோட்டத்திற்கு தொடர்ச்சியான ஆபத்து என்று ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், பிப்ரவரி முதல் 3 முறை ரெப்போ வட்டி விகிதம் 1 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. வளர்ந்து வரும் பொருளாதார மற்றும் நிதி முன்னேற்றங்கள் மற்றும் எதிர்கால தொலைநோக்கு அடிப்படையில் ரெப்போ வட்டி விகிதத்தை 5.5 சதவீதத்தில் இருந்து மாற்றாமல் வைத்திருக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் வலுவாக உள்ளதாக அவர் கூறினார்.

நிதிக்கொள்கைக் குழுவின் கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவில், வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் இல்லாததால் ரெப்போ ரேட் விகிதம் 5.5 என்ற அளவிலே உள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி முதல் சில்லறை பணவீக்கம் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. நடப்பு நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கான கணிப்பை 6.5 சதவீதமாக தக்க வைத்துக்கொண்டுள்ளது ரிசர்வ் வங்கி என்றார்.

ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கான வட்டி விகிதம் ஆகும். ரெப்போ ரேட் குறையும்போது, வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும்.

வங்கிகள் அளிக்கும் வீட்டுக்கடன், வாகனக் கடன்கள் மற்றும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை.

central bank has kept the repo rate unchanged at 5.5 per cent

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு ரத்து

வால்பாறையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்கள் உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT