தீயணைப்பு வாகனம் மோதியதில் கவிழ்ந்த டிராக்டா் - சேதமடைந்த தீயணைப்பு வாகனம்  
தற்போதைய செய்திகள்

டிராக்டர் மீது தீயணைப்பு வாகனம் மோதி விபத்து: நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர்

கெங்கவல்லி அருகே டிராக்டர் மீது தீயணைப்புத் துறை வாகனம் மோதியதில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயத்துடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

சேலம்: கெங்கவல்லி அருகே டிராக்டர் மீது தீயணைப்புத் துறை வாகனம் மோதியதில் தீயணைப்பு வீரர்கள் 2 பேர் காயத்துடன் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி உடையார்பாளையம் பகுதியில் மலைப்பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில், கெங்கவல்லி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் (பொ) வெங்கடேசன், பணியாளா்கள் பாலகிருஷ்ணன், சதீஷ்குமாா், ரமேஷ், வசந்த் ஆகிய ஐந்து பேருடன் தீயணைப்பு வாகனம் செவ்வாய்க்கிழமை தம்மம்பட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.

தீயணைப்பு வாகனத்தை சுபாஷ் சந்திரபோஸ் இயக்கியுள்ளார். அப்போது கூடமலை பகுதியில் வாகனம் சென்றுகொண்டிருந்த போது அதே திசையில் நடுவலூரை சேர்ந்த செங்குட்டுவேல் என்பவர் தம்மம்பட்டி கொக்கான்காட்டை பகுதிக்கு ஜல்லிசிப்சம் லோடு ஏற்றிக்கொண்டு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டரை தீயணைப்பு வாகனம் முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியது. இதில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து வயல்வெளிக்குள் புகுந்த தீயணைப்பு வாகனம் மின் கம்பத்தின் மீது மோதி நின்றது. டிராக்டர் மற்றும் தீயணைப்பு வாகனம் நசுங்கி சேதமடைந்தது.

இதில் தீயணைப்பு வகானத்தில் சென்ற டிராக்டர் வெங்கடேசன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு காலில் காயமேற்பட்டது. டிராக்டா் ஓட்டுநா் உள்பட மற்ற 6 பேரும் நல்வாய்ப்பாக லேசான காயங்களுடன் உயிரிதப்பினர்.

அனைவரும் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Fire truck collides with tractor in accident. Fortunately, everyone survived

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதராஸி ப்ளாக்பஸ்டரா? ஏ. ஆர். முருகதாஸை சீண்டிய சல்மான் கான்!

வங்கி மோசடி: 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

ஊழியர்களே எச்சரிக்கை! 'பாஸ்' என்று கூறி ஆள்மாறாட்ட மோசடி!

எல்பிஜி டேங்கர் லாரி வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டது!

இத்தாலி பிரதமர் மெலோனியை அழகி எனப் புகழ்ந்த அமெரிக்க, துருக்கி அதிபர்கள்!

SCROLL FOR NEXT