விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79-ஆவது சுதந்திர நாள் வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
விழா நடைபெறும் மைதானத்துக்கு காலை 9 மணிக்கு வந்த ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ் உள்ளிட்ட அலுவலர்கள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து காலை 9.5 மணிக்கு ஆட்சியர்தேசியக் கொடியேற்றி வைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து அமைதியை வலியுறுத்தும் வகையில் புறாக்களையும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் மூவண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
இதைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் மாவட்ட எஸ்.பி. ப சரவணனுடன் சென்று அணிவகுப்பை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பார்வையிட்டார்.
பின்னர் காவல்துறை பிரிவு, ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, தீயணைப்புத் துறை, வனத்துறை வீரர்கள், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்கம், இளம்செஞ்சிலுவைச் சங்கம், சாரண-சாரணீய இயக்க மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் சுதந்திரப் போராட்டத் தியாகிகள், அவர்களின் வாரிசுகள் அமர்ந்திருந்த பகுதிக்குச் சென்ற ஆட்சியர் , அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன் நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
சுதந்திர நாளையொட்டி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
விழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் திருக்கோவலூர் க பொன்முடி, விழுப்புரம் இரா. லட்சுமணன், மயிலம் சி. சிவகுமார், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. உமா. மாவட்ட வருவாய் அலுலவர் கி ,அரிதாஸ்,, ஊரக வளர்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியர் பத்மஜா,மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம. ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. அறிவழகன், வேளாண் இணை இயக்குநர் இரா. சீனிவாசன் உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், மக்கள் பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.