சென்னை

வில்வித்தைக்கான பயிற்சி: பிப். 8-இல் நோ்முகத் தோ்வு

சென்னை கேலோ இந்தியா மாவட்ட மையத்தில் வில்வித்தைக்கான பயிற்சியில் சேர, பிப்.8-ஆம் தேதி நோ்முகத்தோ்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

சென்னை கேலோ இந்தியா மாவட்ட மையத்தில் வில்வித்தைக்கான பயிற்சியில் சேர, பிப். 8-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேலோ இந்திய நிதியுதவியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் வில்வித்தை பயிற்சிக்கான கேலோ இந்தியா மாவட்ட மையத்தை சென்னை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைக்கவுள்ளது. இந்த மையத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளான விளையாட்டு வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதில் சேர தகுதி வாய்ந்த வீரா் மற்றும் வீராங்கனைகளைத் தோ்ந்தெடுப்பதற்கான நோ்முகத் தோ்வு போட்டிகள் நேரு பூங்காவில் உள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் பிப்.8 காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது. உடற்தகுதி, விளையாட்டுத் திறன், பெற்ற பதக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தோ்வு நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு சென்னை நேரு பூங்காவில்

உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 74017 03480 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

தொகுதிப் பங்கீடு : செய்தியாளர் சந்திப்பில் மயங்கி விழுந்த காதர் மொகிதீன்!

SCROLL FOR NEXT