புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆயுதப்படை திடலில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
முன்னதாக,மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாவுடன் திறந்த ஜீப்பில் காவல்துறையினரின் அணிவகுப்பைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, பல்வேறு துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்புப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார் ஆட்சியர் மு. அருணா.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ. ராஜராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை சாந்தநாதபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் கம்பன் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்திலும் மேயர் செ.திலகவதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
கைக்குறிச்சி ஸ்ரீ பாரதி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரித் தலைவர் குரு. தனசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரித் தாளாளர் பிச்சப்பா மணிகண்டன் கொடியேற்றி வைத்தார். இயக்குநர் ம.பிச்சப்பா, செயலர் மு. விஸ்வநாதன், முதல்வர் குழ. முத்துராமு உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.