தற்போதைய செய்திகள்

விருத்தாசலம் அருகே கார் விபத்தில் 3 பேர் பலி; 3 பேர் காயம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.

இணையதளச் செய்திப் பிரிவு

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே புதன்கிழமை காலை நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் பலியாகினர், 3 பேர் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் ஒன்றியம் எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன், ஆதினேஷ், வேலு, வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 6 இளைஞர்களும் காரில் வேப்பூர் நோக்கி சென்றுள்ளனர். கார் விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் அருகே சென்றுகொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காரில் பயணித்த எருமனூர் கிராமத்தை சேர்ந்த ஐயப்பன்(19), ஆதினேஷ்(22), வேலூர்(19) ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும், வெங்கடேசன், கௌதம், நடராஜ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த மூன்று பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விபத்து குறித்து வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Three people were killed and three others injured in a road accident near Virudhachalam, Cuddalore district, on Wednesday morning.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருதலைக் காதல்! ஆசிரியர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற மாணவர்!

புதிய மாடலை அறிமுகப்படுத்தியது மெர்சிடஸ் பென்ஸ்: விலை ரூ.1.35 கோடி

மசோதாவை நிறுத்திவைக்க முடிந்தால் ஆளுநரின் விருப்பப்படி அரசு செயல்படுகிறதா? - உச்சநீதிமன்றம்

தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

ஆப்கன் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 78 ஆக அதிகரிப்பு!

SCROLL FOR NEXT