ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி  
தற்போதைய செய்திகள்

ஒண்டிவீரன் நினைவு நாள்: எடப்பாடி கே. பழனிசாமி மரியாதை!

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இணையதளச் செய்திப் பிரிவு

சுதந்திரப் போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 254 ஆவது நினைவு நாளையொட்டி, ராணிப்பேட்டையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி்சாமி ஒண்டிவீரன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்திய சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரனின் 254-ஆவது நினைவு நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தனியார் விடுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்து அவரது உருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மலர்தூவிதூவி மரியாதை செலுத்தினார்.

இதில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், நெற்கட்டும் செவல் பகுதியைச் சோ்ந்த ஒண்டிவீரன் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த முதல் சுதந்திரப் போராட்ட வீரா் ஆவாா். பூலித்தேவன் படையில் தளபதியாக இருந்த இவா், ஆங்கிலேயப் படைகளைத் தனியாகச் சென்று அழித்ததால், ஒண்டிவீரன் என அழைக்கப்பட்டாா்.

பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவாக 2016 ஆம் ஆண்டு மணிமண்டபம் கட்டப்பட்டு, அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது. 1771 ஆம் ஆண்டு இயற்கை எய்திய ஒண்டிவீரனுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20-ஆம் நாள் நினைவு நாள் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

On the occasion of the 254th death anniversary of freedom fighter Ondiveeran, AIADMK General Secretary Edappadi Palaniswami paid tribute to the portrait of Ondiveeran in Ranipet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரக்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

4 மாநிலங்களில் ரூ. 24,634 கோடியிலான ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜக எம்.பி.யை சந்தித்து நலம் விசாரித்த மமதா!

மயிலியர்றளர் பொல்கி... மடோனா!

SCROLL FOR NEXT