புது தில்லி: தில்லியில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை காலை சுமார் 6 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன. இது நான்கு நாள்களில் மூன்றாவது சம்பவம் ஆகும்.
தில்லி தீயணைப்புத் துறைக்கு மாளவியா நகரில் உள்ள எஸ்கேவி மற்றும் பிரசாத் நகரில் உள்ள ஆந்திரா பள்ளி, பிஜிஎஸ் சர்வதேச பள்ளி, ராவ் மான் சிங் பள்ளி, கான்வென்ட் பள்ளி, மேக்ஸ் ஃபோர்ட் பள்ளி மற்றும் துவாரகாவில் உள்ள இந்திர பிரஸ்தா சர்வதேச பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு முறையே காலை 6.35 முதல் காலை மற்றும் 7.48 மணி வரை மிரட்டல் எச்சரிக்கைகள் வந்தன.
வெடிகுண்டு மிரட்டல்களை அடுத்து தீயணைப்புப் படை வீரா்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு படையினா், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் மிரட்டல் வந்துள்ள பள்ளிகளுக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாரத்தின் தொடக்கத்தில் இதேபோன்ற சம்பவங்கள் தொடர்வது சமீபத்திய பரப்பு செய்தியாக உள்ளது.
ஆகஸ்ட் 18 ஆம் தேதி தில்லி முழுவதும் 32 பள்ளிகளுக்கு இதேபோன்ற மிரட்டல்கள் வந்தன. அது பின்னா் புரளி என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு நாள்களுக்குப் பிறகு, புதன்கிழமை தலைநகரில் 50 பள்ளிகளுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், வியாழக்கிழமை நகரில் 6 பள்ளிகளுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன.
நகரம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் பிற டிஜிட்டல் தடங்களை பகுப்பாய்வு செய்து மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்படுகிறது என்பதனை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.