நொய்டாவில் உள்ள சுமார் 20 தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே பள்ளி, கல்லூரி, நீதிமன்றம், வணிக வளாகங்கள் ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது.
அதன்படி, இன்று நொய்டாவில் உள்ள 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மூத்த காவல்துறை அதிகாரி கூறுகையில்,
நொய்டாவில் சுமார் 20 தனியார்ப் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்ப் படையினர் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு விரைந்தனர்.
சில தனியார் கல்வி நிறுவனங்களின் வளாகங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன, அதே நேரத்தில் சைபர் குழுவினர் மின்னஞ்சல் அனுப்பியவர்களையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளன.
வதந்திகளைக் கண்டு பெற்றோர்கள் பீதியடைய வேண்டாம். பள்ளியில் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது. இதுவரை எந்தவித வெடிகுண்டும் கண்டறியப்படவில்லை. போலி மின்னஞ்சல் அனுப்பிய நோக்கத்தை அறிய, விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
கௌதம் புத்த நகர் மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 20 தனியார்ப் பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு மின்னஞ்சல் வெளிநாட்டு முகவரியிலிருந்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.