மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு 
தற்போதைய செய்திகள்

மேட்டூா் அணை நீா்மட்டம் 120 அடியாக நீடிப்பு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-ஆவது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கும் நிலையில், அணையின் நீர்மட்டம் 3-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது.

கா்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 30,850 கன அடியாக நீடிக்கிறது.

இந்நிலையில், அணைக்கு நீா்வரத்து 30,850 கன அடியாக நீடிப்பதால், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 23,850 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நீா் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 16,500 கனஅடி நீரும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு 800 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக 6,500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீா்மட்டம் கடந்த 3 நாள்களாக 120 அடியாக உள்ளது. அணையின் நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாக உள்ளது.

The water level in the Mettur Dam remained at 120 feet for the third day, while the inflow of water into the dam remained at 30,850 cubic feet per second on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!

பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்

மிசோரமில் ரூ.75.82 கோடி போதைப்பொருள் பறிமுதல்

ஈரான்: ஆப்கன், பாக். எல்லையில் 5 காவல் அதிகாரிகள் சுட்டுக்கொலை!

உடனிருப்பவர் எல்லாம் உறவினர் அல்ல... ரேஷ்மா!

SCROLL FOR NEXT