சென்னை: விநாயகர் சதுர்த்தியாயொட்டி, தமிழகம் முழுவதும் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் கோயில்களில் புதன்கிழமை காலை முதல் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்ச்சி விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகா் சதுா்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் கோயில்களில் அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் காலை முதல் உற்சாகத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வீடுகளிலும் நகரின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் களிமண் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு அவற்றை அலங்கரித்து வைத்து பூஜைகள் செய்தும், விநாயருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, சுண்டல், இனிப்பு வகைகளை படைத்து அளவில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள விநாயகர் கோயில்கள் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்று வருகின்றன.
தடைகளை நீக்குபவர் மற்றும் அறிவை வழங்குபவர் என்று நம்பப்படும் விநாயகருக்கு வெல்லம் மற்றும் தேங்காயால் செய்யப்பட்ட 'கொழுக்கட்டை', சுண்டல் மற்றும் இனிப்புப் பண்டத்தை பக்தர்கள் காணிக்கையாக படைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.
திருச்சியில் மலையின் உச்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உச்சிப்பிள்ளையார் கோயிலில் புதன்கிழமை காலை 9 மணி முதல் 10. 30 மணிக்குள் உச்சிப்பிள்ளையாா் மூலவா், மாணிக்க விநாயகா் மூலவா் சந்நிதிகளில், முறையே 75 கிலோ வீதம் மொத்தம் 150 கிலோ எடையில் பிரம்மாண்ட கொழுக்கட்டை படைக்கப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நகரின் பல பகுதிகளில், குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் இந்து அமைப்புகளால் பிரமாண்டமான அளவிலான மற்றும் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்கள் அமைதியான முறையில் வழிபாடு செய்யும் வகையில் காவல்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.