ஜோத்பூர்: 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தேர்வை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் அகாடமியிலிருந்து 2 பயிற்சி துணை ஆய்வாளர்களை சிறப்பு நடவடிக்கைக் குழு கைது செய்தது. கைது செய்யப்பட்ட இருவரும் உடன்பிறந்தவர்கள் என்றும் அவர்கள் ஜலோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது.
இருவரும் தேர்வில் தேர்ச்சி பெற கசிந்த வினாத்தாளைப் பயன்படுத்திய நிலையில் அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தினர். மாஃபியா மன்னன் பூபேந்திர சரணின் சகோதரர் கோபால் சரண் மூலம் வினாத்தாளை சகோதரர்கள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபால் 2011 தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு 2014 இல் எஸ்.ஐ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே வழக்கில், மஞ்சு பிஷ்னோயின் சகோதரி சந்தோஷியும் பிடிபட்டனர்.
தேர்வு வினாத்தாள் கசிந்த வழக்கு தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட பயிற்சி எஸ்.ஐ.க்களை கைது செய்யப்பட்ட நிலையில், 2021 போலீஸ் தேர்வை மறுஆய்வு செய்யவும், தேர்வை ரத்து செய்ய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக அமைச்சரவைக் குழு ஒன்றை அமைத்தது ராஜஸ்தான் அரசு.
இந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 13 ஆம் தேதி போலீஸ் எஸ்ஐ ஆள்சேர்ப்பு செயல்முறையை ரத்து செய்யக் கோரி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின் போது, ஆள்சேர்ப்பை ரத்து செய்ய விரும்பவில்லை என்று மாநில அரசு தரப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பிறகு நீதிமன்றம் ஆகஸ்ட் 14 இல் தனது உத்தரவை ஒத்திவைத்தது.
இந்நிலையில், வினாத்தாள் கசிவு மற்றும் கூட்டுச் சதி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து 2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வை ரத்து செய்து ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதி சமீர் ஜெயின் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என மனுதாரர் ஹரேந்தர் நீல் கூறியுள்ளார்.
மேலும், தேர்வு வினாத்தாள் சமூக வலைதளமான வாட்ஸ்அப் மூலம் கசிந்துள்ளதையும், சம்மந்தப்பட்டவர்களுக்கு புளூடூத் மூலம் சம்மந்தப்பட்ட கும்பல் பகிர்ந்துள்ளதை உறுதி செய்ததை அடுத்து ஆள்சேர்ப்பைத் தொடர்வது துரதிர்ஷ்டவசமானது என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது மைல்கல் தீர்ப்பு என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.
"இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு. ஒரு நல்ல தீர்ப்பு மற்றும் உண்மையான நீதி என்றால் என்ன என்பதை ராஜஸ்தான் மக்கள் இப்போது புரிந்துகொள்வார்கள். வழக்கு நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தாலும், இது ஒரு சிறந்த தீர்ப்பு, இந்த தீப்பு மூலம் அனைவருக்கும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்." என வழக்குரைஞர் ஓ.பி. சோலங்கி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் அமைச்சர் கிரோடி லால் மீனா கூறுகையில், "இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களின் வாழ்க்கை வீணடிக்கப்பட்டதற்கு முந்தைய அரசே காரணம்." வினாத்தாள் கசிவுக்கான ஆதாரங்கள் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், தேர்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், தேர்வு முன்னதாகவே ரத்து செய்யப்படவில்லை. இன்றைய தீர்ப்பு இளைஞர்களின் போராட்டத்திற்கான வெற்றியாகும். இந்த தீர்ப்பு ராஜஸ்தான் மாநில வேலையற்ற இளைஞர்களுக்கு ஆதரவானது." என தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.