முகப்பு
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம் பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது தொடர்பாக...

Updated On : 3 டிசம்பர் 2025, 2:33 pm IST
நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே நினைவஞ்சலி செலுத்திய மக்கள் மற்றும் ஆசிரியர்கள்
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நிகழ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 16 ஆண்டு நினைவஞ்சலி புதன்கிழமை(டிச.3) செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வேன், 2009 ஆம் ஆண்டு டிச. 3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சேர்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவர்கள் உள்பட 9 பேரும், சுகந்தி என்ற ஆசிரியை ஒருவரும் உயிரிழந்தனர்.

Advertisement

Advertisement

அஞ்சலி செலுத்திய நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள்,

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண் அருகே புதன்கிழமை(டிச.3) 16 ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில் உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர், மக்கள் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

நாகக்குடையான் அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் மாணவர்கள், ஆசியர்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments