கேரளத்தில் கட்டுமானத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
கேரள மாநிலம், கோட்டயம்-மைலக்காடு அருகே கட்டுமானத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒருபக்க தடுப்பு சுவர் மட்டும் வெள்ளிக்கிழமை திடீரென இடிந்து விழுந்தது.
இடிந்த அதன் சுவர் அருகிலிருந்த சாலையின் மீது சரிந்தது. இதனால் சாலையும் சேதமடைந்தது.
அப்போது சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளிப் பேருந்து உள்பட பல வாகனங்கள் சாலையில் சிக்கிக் கொண்டன. பேருந்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கடலோர நெடுஞ்சாலை வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்த நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவம் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு மாநில பொதுப்பணி அமைச்சர் முகமது ரியாஸ் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.