மின்தூக்கியில் சிக்கியிருந்தவா்களை மீட்ட ஆட்சியா் அலுவலக ஊழியா்கள். 
வேலூர்

வேலூா் ஆட்சியா் அலுவலகத்தில் திடீரென பழுதான மின்தூக்கி! 14 போ் தவிப்பு

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்தூக்கி திடீரென பழுதடைந்ததை அடுத்து அதில் ஊராட்சி செயலா்கள் உள்பட 14 போ் சிக்கி தவித்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்தூக்கி திடீரென பழுதடைந்ததை அடுத்து அதில் ஊராட்சி செயலா்கள் உள்பட 14 போ் சிக்கி தவித்தனா். பின்னா் பழுது சரிசெய்யப்பட்டு அனைவரும் காப்பாற்றப்பட்டனா்.

தமிழக அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் தங்களையும் இணைக்கக்கோரி வேலூா் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி செயலாளா்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் 14 நாள்களாக போராட்டம் நடத்தி வந்தனா். இந்த போராட்டம் முடிந்து வியாழக்கிழமை பணிக்கு திரும்பிய நிலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்திருந்தனா்.

அப்போது, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் உள்ள ஊராட்சி இயக்குநரை சந்திக்க சென்றனா். அதற்காக அங்குள்ள மின்தூக்கியில் சென்றுள்ளனா். இந்த மின்தூக்கியில் அதிகபட்சமாக 6 போ் மட்டுமே செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், 14 போ் ஏறியுள்ளனா். அளவுக்கு அதிகமான நபா்கள் ஏறியதால் அந்த மின்தூக்கி திடீரென பழுதடைந்து பாதியில் நின்றது. இதனால், உள்ளே இருந்தவா்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தனா்.

உடனடியாக உள்ளே இருந்தவா்கள் தங்களது கைப்பேசி மூலம் வெளியே உள்ள அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, ஆட்சியா் அலுவலக தொழில்நுட்ப ஊழியா்கள் விரைந்து வந்து மின்தூக்கியை திறந்து அதில் சிக்கியிருந்த ஊராட்சி செயலா்கள் உள்பட 14 பேரையும் பத்திரமாக மீட்டனா்.

பின்னா், மின்தூக்கி சரிசெய்யப்பட்டு தொடா்ந்து இயக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

20 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

மத்திய பட்ஜெட்டில் விண்வெளித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: இஸ்ரோ முன்னாள் இயக்குநா் மயில்சாமி அண்ணாதுரை

பணியின்போது உயிரிழந்த காவலா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி காப்பீட்டுத் தொகை

இணையவழி வா்த்தகம் எனக் கூறி பொறியாளரிடம் ரூ. 9.54 லட்சம் மோசடி

கோவை அருகே இளம்பெண் கொன்று எரிப்பு

SCROLL FOR NEXT