எண்ணங்களால், எழுத்துக்களால் விடுதலை, சமூகநீதி, பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதி பாரதி என தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார்.
மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா வியாழக்கிழமை(டிச.11) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அரசியல் தலைவர்கள் பலரும் பாரதியாரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கே.அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமது எண்ணங்களாலும், எழுத்துக்களாலும், விடுதலைக் கனல் மூட்டிய புரட்சியாளர், சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை பேசிய சீர்திருத்தவாதிகளில் முதன்மையானவர், நம் மகாகவி, சுப்பிரமணிய பாரதியார் பிறந்த நாள் இன்று.
இன்றைய அறிவியல் முன்னேற்றங்கள் அனைத்தையும் அன்றே எழுதிய தீர்க்கதரிசி. வாழ்க்கை முறைகளையும், நன்னெறிகளையும், தன் எழுத்துக்களால் சுடர்விடச் செய்தவர். பாரதம் உலகின் குருவாக விளங்க வேண்டும் என்ற மகாகவியின் கனவு இன்று நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகிக் கொண்டிருப்பது, அவருக்கான அர்ப்பணிப்பாகும்.
தாய்மொழியையும், தாய்நாட்டையும் தம் உயிரெனக் கொண்டிருந்த மகாகவி பாரதியாரின் புகழை போற்றி வணங்குகிறோம். மண் உள்ள காலம் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.