ஆந்திரத்தில் கோயிலுக்குச் சென்ற தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திரம் மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 35 பேர் தனியார் பேருந்து ஒன்றில் பத்ராசலம் பகுதியில் உள்ள ராமர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து அன்னாவரம் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று(டிச. 12) அதிகாலை நடந்த இந்த விபத்தில், பேருந்தில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்தூர் போலீசார், மீட்புப் ணிகளில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக பத்ராசலம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் காணப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.