தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை 
தற்போதைய செய்திகள்

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை: வெள்ளி கிராமுக்கு ரூ.6 குறைந்தது!

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை விலையில மாற்றமின்றி பவுன் ரூ.98,960-க்கு விற்பனையாகிறது.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை விலையில் மாற்றமின்றி பவுன் ரூ.98,960-க்கு விற்பனையாகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பானையாகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் (டிச. 1) பவுன் ரூ.96,560-க்கு விற்பனையானது. அதன்பின்னா், தொடா்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை, மாலை என கிராமுக்கு ரூ.320 உயா்ந்து ரூ.12,370-க்கும், பவுனுக்கு ரூ.2,560 உயா்ந்து ரூ.98,960-க்கும் விற்பனையான நிலையில், சனிக்கிழமை தங்கம் விலை மாற்றமின்ற வெள்ளிக்கிழமை விலையிலேயே விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை பவுன் ரூ.1 லட்சத்தை தொடும் எனப் பொருளாதார நிபுணா்கள் கூறுகின்றனர்.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.7 உயா்ந்து ரூ.216-க்கு விற்பனையான வெள்ளி விலை, சனிக்கிழை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.6,000 குறைந்து ரூ.2.10 லட்சத்துக்கும் விற்பனையாகிறது..

வெள்ளி விலை உயர்வுக்கு என்ன காரணம்?

சூரிய மின் தகடு, பேட்டரிகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட மின்சாதனங்களில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் வெள்ளி விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

There is no change in gold prices today: Silver decreased by Rs. 6 per gram!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

OPS- ஐ மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை! - EPS

விஜய் நல்ல நடிகர்தான்! ஆனால் சிறந்த அரசியவாதி நாங்கதான்! - EPS!

”யாருக்காக உச்சத்தை விட்டுட்டு வந்தீங்க?” விஜய்யை தாக்கிப் பேசிய EPS!

23 இந்திய மீனவர்கள் விடுவிப்பு! 128 வங்கதேசத்தினர் ஒப்படைப்பு!

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

SCROLL FOR NEXT