முதுபெரும் இடதுசாரி தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஆர்.நல்லகண்ணு 
தற்போதைய செய்திகள்

நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்ப்பது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விடுதலைப் போராட்ட வீரர் தோழர் இரா.நல்லகண்ணுவின் 101 ஆவது பிறந்த நாள் வரும் 26 ஆம் தேதி கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

நல்லகண்ணு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் வீடு திரும்பினார்.

எனினும் மருத்துவர்கள் ஆலோசனை அடிப்படையில், வீட்டிலும் மருத்துவக் கண்காணிப்பில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், நல்லகண்ணுவை அவரது குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அருகில் சென்று, அவரோடு உரையாட அனுமதிப்பதில்லை என்பதால், அவரது 101 பிறந்த நாளை முன்னிட்டு, தோழர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அவரை நேரில் சந்திப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தான் அவர் குணமடைய உதவும் வாழ்த்தாக அமையும் என கூறியுள்ளார்.

Meeting Nallakannu in person must be strictly avoided says Communist Party of India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறிஸ்துமஸை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Coffee குடிப்பது ஆயுளை அதிகரிக்குமா? ஒரு நாளைக்கு எத்தனை Coffee குடிக்கலாம்? | Health Care

அருண் விஜய்யின் ரெட்ட தல பட முன்னோட்ட விடியோ!

ஹரியாணாவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சிலை! அமித் ஷா திறந்து வைத்தார்!

அமமுகவிற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு? TTV தினகரன் விளக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 24.12.25

SCROLL FOR NEXT