சித்ரதுர்காவில் அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரி படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்து மீது மோதியதில், அந்தப் பேருந்து தீப்பிடித்ததில் 17 பேர் பலியாகினர். சம்பவ இடத்தில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.  
தற்போதைய செய்திகள்

இந்த கோர விபத்து நிதழ்ந்தது எப்படி?: பேருந்து ஓட்டுநர் விளக்கம்

சித்ரதுர்கா மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்ததற்கு எதிர்புறத்தில் அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் பேருந்து ஓட்டுநர் ரஃபிக் தெரிவித்துள்ளது தொடர்பாக...

இணையதளச் செய்திப் பிரிவு

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்ததற்கு எதிர்புறத்தில் அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கவனக்குறைவுதான் காரணம் பேருந்து ஓட்டுநர் ரஃபிக் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டத்தில் 32 பயணிகளுடன் கோகர்ணாவுக்கு சென்றுகொண்டிருந்த படுக்கை வசதியுடன் கூடிய சொகுசு பேருந்து மீது வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஹிரியூர் அருகே எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து மீது வேகமாக வந்து மோதியது. இதில் பேருந்தும், கன்டெய்னர் லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணிகள் 17 பேர் உயிரிழந்தனர்., பலர் காயமடைந்தனர். லாரி ஓட்டுநர், லாரியின் கிளீனரும் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

விபத்து நிதழ்ந்தது எப்படி?

விபத்து குறித்து பேருந்து ஓட்டுநர் ரஃபீக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வியாழக்கிழமை அதிகாலை நடந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், எதிர்திசையில் இருந்து அதிவேகமாக வந்த கன்டெய்னர் லாரியைப் பார்த்ததும் தனது வாகனத்தைக் கட்டுப்படுத்த முயன்றதாகவும், ஆனால் முடியவில்லை என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் பேருந்து ஓட்டுநர் கூறினார்.

கன்டெய்னர் லாரி சாலையின் தடுப்புச் சுவரின் மறுபுறத்திலிருந்து வந்து மோதியது. அது அதிவேகமாக வந்தது. அந்த நேரத்தில் நான் 60-70 கி.மீட்டர் வேகத்தில்தான் சென்று கொண்டிருந்தேன். எதிரே இருந்து வாகனம் வருவதைப் பார்த்ததும் தனது வாகனத்தைக் கட்டுப்படுத்த முயன்றேன், ஆனால் லாரி வேகமாக வந்ததால் அது முடியாமல் போனது. லாரி பேருந்தின் மீது மோதியது மட்டும்தான் எனக்குத் தெரியும், அதற்குப் பிறகு என்ன நடந்தது, நான் எப்படி வெளியே கொண்டுவரப்பட்டேன் என்று எனக்குத் தெரியாது," என்று சிகிச்சை பெற்று வரும் பேருந்து ஓட்டுநர் ரஃபீக் செய்தியாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், நான் பேருந்தைக் கட்டுப்படுத்த முயன்றபோது, எனது பேருந்து அருகில் சென்று கொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீது லேசாக உரசியது; அது என்ன வாகனம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் கட்டுப்படுத்த) முடியவில்லை என்றார்.

சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் பேருந்தின் கிளீனர் முகமது சாதிக், விபத்தின் தாக்கத்தால் தான் பேருந்திலிருந்து தூக்கி எறியப்பட்டதாகக் கூறினார்.

எதிர்திசையில் இருந்து வந்த லாரி நேரடியாக டீசல் டேங்கில் மோதியது. விபத்து நடந்தபோது நான் பேருந்தின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்தின் தாக்கத்தால், பேருந்தின் கண்ணாடி உடைந்து நான் வெளியே தூக்கி எறியப்பட்டேன் என்று அவர் கூறினார்.

விபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவுதான் இந்த கோர விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் முர்மு, கர்நாடக முதல்வர் சித்தராமையா, மத்திய அமைச்சர் குமாரசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The driver of the bus that met with an accident, in which at least nine people were killed in this district on Thursday, said that he tried to control his vehicle on seeing the overspeeding truck approaching from the opposite direction, but couldn't.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலு நாச்சியார் நினைவு நாள்: விஜய் மரியாதை!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

2025: உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் ஆன்மிக சங்கமம்!

கண்ணீர்விட்ட சோனியா.. சந்திப்புக்குப் பின் உன்னாவ் பெண் தகவல்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் ஏற்றுக்கொள்ள முடியாதது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT