புதுதில்லி: அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார். தொடர்ந்து எட்டாவது முறையாக இன்று மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக அவரது உரையில், அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2047 ஆம் ஆண்டுக்குள் 100 கிலோவாட் அளவில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.