வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது. 
தற்போதைய செய்திகள்

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 6.50 குறைந்துள்ளது.

DIN

இந்தியாவில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.7 குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டிற்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ. 6.50 குறைந்து ரூ.1,953.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை உயரும்போது சமையல் எரிவாயு உருளையின் விலை உயா்வது வழக்கமாக உள்ளது. மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் காா்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை சா்வதேச நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன.

அந்தவகையில் ஆண்டின் இரண்டாவது மாதத்தின் முதல் நாளான இன்று (பிப்.1) வர்த்தகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன.

அதன்படி, 19 கிலோ எடை கொண்ட அந்த வகை சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.7 குறைக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ. 6.50 குறைந்து ரூ.1,953.50-ஆக விற்பனையாகிறது.

மும்பையில் ரூ.1,750-ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,906-ஆகவும், புதுதில்லியில் ரூ.1797- ஆகவும் விற்பனையாகிறது.

அதேவேளையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.818.50-க்கு விற்பனையாகிறது.

உள்ளூர் வரிகள் மற்றும் போக்குவரத்து செலவுகளைப் பொறுத்து சிலிண்டர்களின் விலைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதிவராஹப் பெருமாள் கோயிலில் உதய கருட சேவை

சுனாமி பேரிடா் முன்னெச்சரிக்கை ஒத்திகை திட்டமிடல் கூட்டம்

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை

சீனாவில் பிரதமா் மோடி: ஷி ஜின்பிங்குடன் இன்று பேச்சு!

SCROLL FOR NEXT