கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

தென் கொரியா: தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

தென் கொரியாவின் மொழி அருங்காட்சியகத்தில் தீ விபத்து நிகழ்ந்துள்ளதைப் பற்றி...

DIN

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (பிப்.1) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 வது தளத்தில் இன்று (பிப்.1) காலை 8.40 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர், அந்த தீயானது 4வது தளத்திற்கும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு மதியம் 12.30 மணியளவில் (கொரியா மணிக்கணக்கில்) தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இது தொடர்பாக வெளியான சிசிடிவி காட்சிகளில் அருங்காட்சியகக் கட்டடத்திலிருந்து கருநிற புகை வெளியாவது பதிவாகியுள்ளது. கட்டடத்தினுள் சிக்கியிருந்த அருங்காட்சியக பணியாளர்கள் 4 பேரும் பத்திரமாக மிட்கப்பட்டனர்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

மேலும், அருங்காட்சியகத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதினால் பொதுமக்கள் பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இருப்பினும், மீட்புப் பணிக்காக உள்ளே சென்ற தீயணைப்பு வீரர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென் கொரிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த அருங்காட்சியகத்தில் 1443 ஆம் ஆண்டைச் சேர்ந்த கொரிய மொழியின் அரிதான எழுத்துக்கள் பொறித்த பழமையான பொருள்கள் பாதுகாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாகிஸ்தான் போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!

மாணவர்களுக்கு கல்வி கடன் வட்டி தள்ளுபடி: முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு

சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற விண்கலனில் என்ஜின் கோளாறு! 5,000 கி. சரக்குடன் சுற்றுப்பாதையில் சிக்கியது!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி நீக்கம்!

SCROLL FOR NEXT