Center-Center-Delhi
தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்!

மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிப். 8ல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிப்பு.

DIN

நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மத்திய பாஜக அரசுக்கு எதிராக பிப். 8ல் அனைத்து மாவட்டங்களிலும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

'ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8(சனிக்கிழமை) அன்று மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, தேர்தல் நடைபெறும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி.க்கள் பலரும் பட்ஜெட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT