தமிழ்நாடு

பிப். 12ல் மத்திய அரசுக்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

மத்திய தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜகவுக்கு எதிராக பிப். 12 ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப். 12 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருந்த நிலையில், தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த அறிவிப்பால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆர்ப்பாட்டம் பிப். 12 அன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் - நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும் - அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுகவையும் கண்டித்து -

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் தலா ஒரு இடத்திலும் மற்றும் கழக ஒன்றியம், நகரம், பேரூர் அளவிலும் 12.02.2026 வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தொழிலாளர் விரோத மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப வலியுறுத்தி அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒருங்கிணைந்து 12.2.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் மறியல் நடத்துவதாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, வருகிற 12.02.2026 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தொழிற்சங்கங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.

திமுக இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"மத்திய தொழிற்சங்கங்கள், தொழில்வாரி தொழிற்சங்கங்கள், துறைவாரியான தொழிற்சங்க சம்மேளனங்கள், விவசாய அமைப்புகள் இணைந்து மத்திய அரசின் விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து நடைபெறுகிற வேலை நிறுத்தத்தில் மத்திய அரசாங்கம் தன்னிச்சையாக மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமலும், தொழிற்சங்கங்களோடு முறையாக கலந்து ஆலோசிக்காமலும், நாடாளுமன்றத்தில் விவாதமின்றியே நிறைவேற்றிய 4 தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெற வேண்டுமென்பதும், மின்சார சட்டத்தை திருத்துவதன் மூலம் உற்பத்தி பகிர்மானம் போன்றவைகள் தனியார் மயமாக்கும் அபாயம் உள்ளதையும்,

விவசாயிகளின் விளைபொருளுக்கு நியாயமான விலை வழங்குவோம் என்ற உத்திரவாதத்தை இதுவரை நிறைவேற்றாததை கண்டித்தும், விதைகள் சட்டத்தை திருத்தம் செய்து சிறு குறு விவசாயிகள் கைவசம் உள்ள விதைகளை செயல்படாமல் செய்யும் போக்கை கண்டித்தும், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை பெயர் மாற்றம் செய்து மத்திய அரசின் பொறுப்பை தட்டிக் கழித்து மாநிலங்களின் நிதிச் சுமையை கூடுதலாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டுமென்பதை வலியுறுத்தியும் நடைபெறுகிற வேலை நிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றன.

தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் - விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்கிற நல்ல நோக்கத்தோடு திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டத்திற்கு தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

DMK supports the strike of trade unions on Feb. 12

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ம.பி. கோயில் திறப்பு விழாவில் கூட்ட நெரிசல்: பெண் பலி, 6 பேர் காயம்!

மகாராஷ்டிர துணை முதல்வராகப் பொறுப்பேற்றார் சுநேத்ரா பவார்!

என்ன, சென்னை விமான நிலையத்தில் ரூ.10-க்கு டீ கிடைக்குமா? எங்கே?

ஃபார்ஸி - 2 பணிகள் துவக்கம்!

பதிலில் திருப்தியில்லை! பேரவையில் பாஜக அமைச்சரை விமர்சித்த பாஜக எம்எல்ஏ!

SCROLL FOR NEXT