பிரதமர் மோடி (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

பாம்பன் பாலத் திறப்பு விழா: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி தமிழகம் வருகைக் குறித்து...

DIN

பாம்பன் புதிய பாலத் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிப். 11, 12 ஆகிய தேதிகளில் தமிழகம் வரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இந்தப் பாலம் அமைத்து 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இதையடுத்து, இந்தப் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்க பல கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இதையும் படிக்க: மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!

இந்தப் பாலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயணிகள் இன்றி 60 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. இதேபோல, பாலத்தின் நடுவில் உள்ள செங்குத்து இரும்பு கர்டா் மேலே தூக்கப்பட்டு, அதன் வழியாக இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான கப்பலை இயக்கியும் சோதனை நடைபெற்றது.

இந்த நிலையில் பாம்பன் புதிய பாலத் திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று புதிய பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மேலும், ரூ. 15,000 கோடிக்கான முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் தொடக்கி வைக்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டார்ஜிலிங் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 18 - நாளை பார்வையிடுகிறார் முதல்வர்!

கண் கவர் பொருங்கோட... மேகா!

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

தொடர் மழையால் வெள்ளம்! கழுத்தளவு தண்ணீரில் தத்தளிக்கும் பிகார்! | Flood | Rain

மகளிர் உலகக்கோப்பை: ஸ்மிரிதி, ஹர்மன்ப்ரீத் ஆட்டமிழப்பு - இந்தியா தடுமாற்றம்!

SCROLL FOR NEXT