பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடர்பாக...
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்துவது விவாதிக்கப்படவுள்ளது.
தமிழக நிதிநிலை தாக்கல் செய்யப்படும் தேதியை இறுதி செய்யும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுப்பட்டு வருகிறது. மேலும், பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அநீதி: பிப். 8-ல் திமுக கண்டன பொதுக் கூட்டம்!
இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜன. 6-ல் கூடியது. இந்த கூட்டத்தொடரில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டவுடன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் வெளியேறினார்.
தொடர்ந்து, ஜன. 11 ஆம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்தொடர் பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.