கோப்புப் படம் 
சென்னை

பிப். 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப். 5-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் பிப். 5-ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு இறுதி செய்யப்பட உள்ளது.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த சில மாதங்களில் தோ்தல் நடைபெற உள்ளதால் தற்போதைய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யும். தோ்தல் முடிந்த பிறகு முழு பட்ஜெட்டை புதிய அரசு தாக்கல் செய்யும்.

இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடா் பிப்ரவரி இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் நடைபெறும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நிகழாண்டுக்கான தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் கடந்த ஜன.20-ஆம் தேதி தொடங்கி ஜன.24-ஆம் தேதி வரை நடைபெற்றது.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

மத்திய பட்ஜெட் : கவனம் ஈர்க்கும் நிர்மலா சீதாராமனின் ஓவியம்!

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்: விஜய் வாழ்த்து!

மத்திய பட்ஜெட்: குடியரசுத் தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்!

மத்திய பட்ஜெட்: நிதியமைச்சக குழுவினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT