தற்போதைய செய்திகள்

முதல்வர் சந்திக்க மறுப்பு: மாஞ்சோலை மக்கள் போராட்டம்!

முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

முதல்வர் சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை என்று கூறி நெல்லை அரசு விருந்தினர் மாளிகை முன்பாக மாஞ்சோலை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று கள ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் இரு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று (பிப். 6) நெல்லை வந்தார். கங்கைகொண்டான், சிப்காட் தொழிற்பூங்காவில் டாடா நிறுவனத்தின் சூரிய மின் உற்பத்தி ஆலையைத் தொடக்கிவைத்தார்.

தொடர்ந்து இன்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்டு 23 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 20 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதனிடையே நெல்லை வரும் முதல்வர், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

அதன்படியே, மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினை பார்க்க இன்று காலை வந்துள்ளனர். முதல்வரும் நேரம் ஒதுக்கியுள்ளதாக அங்குள்ளவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் முதல்வர், அரசு விழாவுக்குப் புறப்படும்போது வெளியே வேனில் இருந்துகொண்டே மனுக்களை வாங்கிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியான மக்கள், அரசு சுற்றுலா மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேரம் ஒதுக்கியும் தங்களை சந்திக்கத் தவிர்ப்பது ஏன்? என கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த சேலையில் பாக்கெட் மட்டும் இருந்தால்... சந்தீபா தர்!

அரசின் நடவடிக்கையை இஸ்லாமியரே விரும்பவில்லை! அரசுக்கு எதிராக நயினார் நாகேந்திரன், இபிஎஸ் கண்டனம்!

பாலய்யாவின் அகண்டா - 2 சிறப்பு காட்சிகள் ரத்து!

திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல: தமிழக அரசு விளக்கம்

ஜார்க்கண்ட் விஷவாயு கசிவு! 2 ஆக அதிகரித்த உயிர்ப் பலிகள்; மக்கள் வெளியேற்றம்!

SCROLL FOR NEXT