மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் (கோப்புப்படம்) 
தற்போதைய செய்திகள்

அமைதியை நிலைநாட்ட அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றது: மணிப்பூர் முதல்வர்

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளதைப் பற்றி...

DIN

வடக்கிழக்கு மாநிலமான மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தனது தலைமையிலான அரசு அனைத்து விதமான முயற்சிகளையும் எடுத்து வருவதாக அம்மாநில முதல்வர் என். பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

அம்மாநிலத்தில் அசாம் ரைப்பில்ஸ் படைபிரிவினால் நடத்தப்பட்ட டிஜிஏஆர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போலோ சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழா இன்று (பிப்.8) நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் பிரேன் சிங், இந்த போட்டியை நடத்தியதற்காக ராணுவம் மற்றும் அசாம் ரைபில்ஸ் படையினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், இதுபோன்ற போட்டிகள் போலோ விளையாட்டை முன்னேற்றுவதுடன் அதற்கு பயன்படுத்தப்படும் போனி குதிரைகளை பாதுக்காக்கப்பட வழி வகுக்கும் எனவும் நவீன போலோ மணிப்பூர் மாநிலத்திலிருந்து தான் உருவானது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, போனி குதிரைகளை பாதுகாக்க அம்மாநில அரசு பல்வேறு வகையான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பாக அந்த குதிரைகளின் மேய்ச்சலுக்காக கிழக்கு இம்பால் மாவட்டத்தின் லம்பேல்பட் பகுதியில் சுமார் 30 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதுடன், பங்கேய் உள்ளிட்ட மற்ற பகுதிகளில் நிலங்கள் இதற்காக பிரத்யேக நிலங்கள் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரூ.7 கோடி போதை மாத்திரைகள் பறிமுதல்! 3 பேர் கைது!

மேலும், அம்மாநிலத்தின் சகோல் காங்ஜெய் எனும் குதிரையேற்றத்துடன் கூடிய பாரம்பரிய பந்து விளையாட்டை முன்னேற்றி ஊக்குவிக்க பாரம்பரிய போலோ விளையாட்டுக்கான முதலமைச்சர் கோப்பை போட்டி நடத்தப்படுவதாகவும் அவர் கூறினார். எனவே, போனி குதிரைகளை பாதுகாக்க அம்மாநில பொது மக்கள் ஆதரவளித்து ஒத்துழைக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் இருக்குழுக்களுக்கு இடையே நடைபெற்று வரும் மோதல்களினால் தற்போது வரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மணிப்பூரில் மீண்டும் அமைதியை நிலைநாட்டி முன்பு போல் அனைத்து மக்களும் ஒத்துமையுடன் வாழ மாநில அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது, என அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT