கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூரில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (பிப்.7) தேடுதல் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!

அந்த சோதனையில் 5 துப்பாக்கிகள் மற்றும் 5 கையெறி குண்டுகள், ஒரு சீன கையெறி குண்டு, நான்கு 40 மி.மீ. லெதோடு குண்டுகள், 3 மோர்ட்டார் குண்டுகள், 2 கண்ணீர் வெடி குண்டு மற்றும் ஒரு புகை குண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் மணிப்பூரில் நடந்து வரும் தாக்குதல்களில் சம்பந்தப்பட்டோர் இது போன்ற ஆயுதங்களை பல்வேறு பகுதிகளில் பதுக்கியுள்ளனர். இவை, அவ்வப்போது இந்தியப் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT