ஆம் ஆத்மி கட்சி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் 
தற்போதைய செய்திகள்

ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம்: பிரியங்கா கக்கா்

நாங்கள் ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம் என்று ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

DIN

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தார், மேலும் நாங்கள் ஒரு ஆக்கபூா்வமான எதிா்க்கட்சியாக செயல்படுவோம் என்று கூறினார்.

பிரியங்கா கக்கா் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடான சந்திப்பில் கூறுகையில்,

"கடந்த பத்தாண்டுகளாக தில்லி மக்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்.மக்களின் தீா்ப்பை நாங்கள் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம். மேலும் பாஜக மக்களுக்காக பாடுபடும் என்று நம்புகிறோம். தில்லியில் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக ஆம் ஆத்மி செயல்படும். ஆம் ஆத்மி கட்சி தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சியாகும். வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம். தனது தவறுகளைப் புரிந்துகொண்டு, அங்கீகரித்து, செயல்படும் ஒரு கட்சி ஆம் ஆத்மி. வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணத்தை நாங்கள் நிச்சயமாக ஆராய்வோம்" என்று கக்கர் கூறினார்.

மேலும் தில்லி மக்களுக்காக கட்சி பாடுபடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தில்லி மக்களுக்கு பாஜக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நாங்கள் பொறுப்பேற்கச் செய்வோம் என்றாா்.

தில்லி சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தோ்தலில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. அதே நேரத்தில்,ஆம் ஆத்மி கட்சி முந்தைய எண்ணிக்கையான 62 இல் இருந்து 22 இடங்களே பெற்றது. தேசிய தலைநகரில் தனது மறுமலர்ச்சியை எதிர்பார்த்த காங்கிரஸ், மீண்டும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

கடினமான போட்டிக்குப் பிறகு கல்காஜி தொகுதியைத் தக்க வைத்துக் கொண்ட அதிஷி, பாஜகவின் ரமேஷ் பிதூரியை 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட அதன் பல உயர்மட்டத் தலைவர்கள் தங்கள் தொகுதிகளை இழந்துள்ள நிலையில், அதிஷியின் வெற்றி ஆம் ஆத்மிக்கு ஒரு சிறப்பு அம்சமாகும்.

சிறிய கட்சிகளான அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக், அகில இந்திய மஜ்லிஸ் இ இதேஹாதுல் முஸ்லிமீன் ஆகியவை ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது ஏன்?: தேஜஸ்விக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மாயம் செய்கிறாய்... ரச்சனா ராய்!

வானவில்... சோபிதா துலிபாலா!

பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைந்து அமல்படுத்த வலியுறுத்தல்

இளவஞ்சி... சஞ்சி ராய்!

SCROLL FOR NEXT