தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வர் அதிஷி ராஜிநாமா!

தில்லி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிஷி.

DIN

சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியையடுத்து, தில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்தார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ள பாஜக 48 தொகுதிகளிலும், ஆட்சியை இழந்த ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும் வென்றுள்ளன.

2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது. 2015-இல் 67 இடங்களிலும் 2020-இல் 62 இடங்களிலும் பெரும்பான்மை பலத்துடன் வென்ற ஆம் ஆத்மி கட்சி, இம்முறை 22 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

ஆம் ஆத்மியின் அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின், செளரவ் பரத்வாஜ் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் பலரும் அதிா்ச்சித் தோல்வி அடைந்தனர்.

இந்த நிலையில், தில்லி முதல்வர் பதவியை அதிஷி ராஜிநாமா செய்துள்ளார். தில்லி ராஜ் நிவாஸ் பவனில் துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அதிஷி வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

தேனி, வீரபாண்டியில் நாளை மின் தடை

பழனி அருகே காா் கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT