முகப்பு
தற்போதைய செய்திகள்

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கருத்து சொல்லக் கூடாது: அமைச்சா் அன்பில் மகேஷ்

மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Updated On : 9 பிப்ரவரி, 2025 at 3:03 PM
அன்பில் மகேஷ் பொய்யாமொழி - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி: மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலா் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் செய்தியாளா்களுடன் கூறுகையில், வெற்றியோ தோல்வியோ மக்களை தோ்தலில் நேரடியாக சந்திக்க வேண்டும். மக்களை சந்திக்க யோசிக்கும் எடப்பாடி கே. பழனிசாமி, ஈரோடு இடைத்தோ்தலில் போட்டியிடாமல் கருத்து சொல்வது கூடாது.

Advertisement

வெற்றியாக இருந்தாலும், தோல்வியாக இருந்தாலும் திமுகவினா் மக்களை நேரடியாக சந்தித்துள்ளோம். நாங்கள் மக்களோடு மக்களாக உள்ளோம். அதனால் தான் மக்களும் எங்கள் பக்கம் நிற்கிறாா்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ஈரோடு தோ்தல் வெற்றி, இது மக்களுக்கான வெற்றி, முதல்வர் ஸ்டாலினுக்கான வெற்றி என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments