சுவேந்து அதிகாரி 
தற்போதைய செய்திகள்

தில்லி பாணியில் மமதா ஆட்சிக்கு முடிவு: சுவேந்து அதிகாரி

திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்த சுவேந்து அதிகாரி.

DIN

தில்லியில் ஆம் ஆத்மியை தோற்கடித்ததுபோல, மேற்கு வங்கத்திலும் மமதா ஆட்சிக்கு முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கவுள்ளது. 2020 தோ்தலில் எட்டு இடங்களில் மட்டுமே வென்ற பாஜக, இம்முறை கூடுதலாக 40 இடங்களில் வென்றுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக வெற்றிப் பெற்றுள்ள நிலையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காவிக் கட்சி வெற்றி பெரும் அடுத்த மாநிலமாக மேற்குவங்கம் இருக்கும் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: மணிப்பூரில் 3 தீவிரவாதிகள் கைது

வரும் 2026 மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெரும் என்று பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து செய்தியாளர்களுடன் பேசிய சுவேந்து அதிகாரி, ”தில்லி மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு தகுந்த பதிலைக் கொடுத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே தில்லியின் பெருமையை மீண்டும் கொண்டுவந்து தூய்மையான நகராக மாற்றமுடியும்.

தில்லியில் உள்ள பெரும்பாலான வங்க மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தார்கள். ஆம் ஆத்மிக்கு எதிரான வெற்றியைப் பெற்றுதந்த பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கிறேன், இனி தில்லி மக்களுக்கு இரட்டை என்ஜின் கொண்ட அரசின் பலன்கள் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துக்களைப் பயங்கரவாதிகளாக சித்திரிக்க காங்கிரஸ் முயற்சி: ஃபட்னவீஸ்

வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

SCROLL FOR NEXT