ரேகா குப்தா. 
தற்போதைய செய்திகள்

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!

தில்லியின் அடுத்த முதல்வர் தொடர்பாக...

DIN

தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

70 உறுப்பினா்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 48 தொகுதிகளில் வெற்றிப்பெற்று ஆட்சியமைக்கத் தகுதி பெற்றுள்ளது. 26 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு பாஜக தில்லியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

தில்லி முதல்வர் யார் என்பது குறித்து உயர்மட்ட அளவில் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

பெண் வேட்பாளர் ரேகா குப்தா

முதல்வர் போட்டியில் அரவிந்த கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ் சாஹிப் சிங், மாநில பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, சுஷ்மா ஸ்வராஜின் மகள் பான்கரி ஸ்வராஜ், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தா உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகிறது.

இந்த நிலையில், தில்லியின் அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. முக்கியமாக ஜாதி மற்றும் பாலினம் போன்ற காரணிகளை சமன்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

பெண் அல்லது பட்டியலின வேட்பாளரை தில்லி முதல்வராக மத்திய பாஜக தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அதிகம் எனக் கூறப்படுகிறது.

ரேகா குப்தாவின் பின்னணியைப் பார்க்கும்போது மாணவ பருவத்தில் இருந்து அரசியல் பயணம், கட்சியில் நடுநிலை போன்ற காரணிகளுடன் வலுவான போட்டியாளராக உள்ளார்.

ஒரு பெண் வேட்பாளரை முதல்வராக்க நினைத்தால் இவரின் வைஷ்ய சமூகப் பின்னணியும் தில்லி பல்கலைக்கழக சங்கத் தலைவராக இருந்த அனுபவமும் இவருக்கு நன்மை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: இந்தியாவில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் பட்டியல்!

இவர் ஷாலிமார் தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியாளரை 29,595 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

பட்டியலின வேட்பாளர் ராஜ்குமார் செளஹான்

மற்றொரு கோணத்தில் பார்த்தால் பட்டியலின வேட்பாளரான ராஜ்குமார் செளஹானை தில்லி முதல்வராகத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அரசுக்குள் ஜாதி மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தை சமன்படுத்த பாஜக முயலும் என்பதால் இவரை துணை முதல்வராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக் கூறப்படுகிறது.

தில்லி முதல்வரை பாஜக மூன்று காரணிகளை வைத்து தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது. முதல் காரணி ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுப்பது, காரணம் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

இரண்டாவது பட்டியலினத்தவரை தேர்ந்தெடுப்பது, பிகாரில் இருந்து வரும் வாக்காளர்களுக்கு இது பயன்படும். மூன்றாவது பெண் வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பது பிரதமரின் பெண்கள் வளர்ச்சிக்கான திறமையான நகர்வாக இது இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT