தற்போதைய செய்திகள்

பணக் கொழுப்பு இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவை: சீமான்

விஜய் - பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்து சீமான்.

DIN

பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய் மற்றும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இருவரின் சந்திப்பு குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து சீமான் பேசியதாவது:

”கத்தரிக்காய் என்று தாளில் எழுதி பயனில்லை. நிலத்தில் இறங்கி விதைபோட்டு செடியாக்கி தண்ணீர்விட்டு விளைவிக்க வேண்டும். மேசையில் அமர்ந்துகொண்டு எழுதி பயனில்லை.

இதையும் படிக்க: அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி!

சமீபகாலமாக தேர்தல் வியூகம் என்ற நோய் வந்துவிட்டது. பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி என்ன தெரியும். பணக் கொழுப்பு அதிகமாக இருந்தால் தேர்தல் வியூக நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள்.

முன்பாக ஆட்சி செய்த காமராஜரோ அறிஞர் அண்ணாவோ வியூக வகுப்பாளரை வைத்துக்கொள்ளவில்லை. எனக்கு மூளை இருக்கு, ஆனால் காதுதான் இல்லை” என்று பேசினார்.

தைப்பூசத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற கேள்விக்கு, “தைப்பூசத்திற்கு வாழ்த்து தெரிவிக்காத அவர், ஏன் முருகன் மாநாடு நடத்தினார். ஒருவேளை அவருக்கு அதில் வாக்கு இல்லைபோல” என்று சீமான் பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

உத்தரகண்டில் மழை, வெள்ளம்: 2,500 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிப்பு

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

முசிறியில் செப்.20-இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

அலைகடலுக்கு அப்பால்...

SCROLL FOR NEXT