போப் பிரான்சிஸ் AP
தற்போதைய செய்திகள்

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...

DIN

போப் பிரான்சிஸ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் நகரம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பாவிலுள்ள தன்னாட்சிப் பெற்ற நாடான வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க சபையின் திருத்தந்தையுமான பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில நாள்களாக சுவாசக்கோளாறு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது உரைகளை படிப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (பிப்.14) அவர் இத்தாலி தலைநகர் ரோமிலுள்ள கெமிளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு சுவாசக்குழாய் அழற்சி (ப்ரொன்சிடிஸ்) நோயிக்கான சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வாடிகன் நகரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரேசில்: பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்ததில் பெண் காயம்

முன்னதாக, இளம் வயதில் அவரது நுறையீரலின் ஓர் பகுதி அகற்றப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாள்களாக அவர் சுவாசக் கோளாறுகளினால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், கடந்த 2023 மார்ச் மாதம் சுவாசக்குழாய் அழற்சி நோய் சிகிச்சைக்காக மூன்று இரவுகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக மூட்டு மற்றும் இடுப்பு வலி, பெருங்குடல் வீக்கம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டிருந்த போப் பிரான்சிஸுக்கு, ஹெர்னியா அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 7

”நாங்கள் யாரும் நாய்கள் கிடையாது!" அண்ணாமலைக்கு பதிலளித்த தவெக அருண்ராஜ்!

அப்டேட் கொடுக்காத கருப்பு!

SCROLL FOR NEXT