தற்போதைய செய்திகள்

எதிர்நீச்சல் - 2 தொடரை முந்தியதா அய்யனார் துணை? இந்த வார டிஆர்பி!

தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம் தொடர்பாக...

DIN

அய்யனார் துணை தொடரின் முதல் வார டிஆர்பி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பாகும் எந்தெந்த தொடர்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது என்பதை டிஆர்பியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்தவகையில், தொடர்களின் டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

சிங்கப் பெண்ணே தொடர் 9.92 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மூன்று முடிச்சு தொடர் 9.73 டிஆர்பி புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

கயல் தொடர் 9.28 டிஆர்பி புள்ளிகளுடனும் மருமகள் தொடர் 8.46 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை தொடர் 8.14 டிஆர்பி புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிக்க: வாட்ஸ்ஆப்பில் இன்ஸ்டாகிராம்! புதிய வசதி அறிமுகம்!

எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த மதுமிதா, இரண்டாம் பாகத்திலும் அவரே நாயகியாக நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை தொடரில் நாயகியாக நடித்து வருகிறார்.

முன்னதாகவே எதிர்நீச்சல் - 2 மற்றும் அய்யனார் துணை தொடர்களுக்கு இடையே போட்டி நிலவி வருகிறது. இதனால் அய்யனார் துணை தொடரின் முதல் வார டிஆர்பி தகவல் குறித்து ரசிகர்களுடன் ஆவலுடன் இருந்தனர்.

அந்த வகையில், இந்த வாரம் எதிர் நீச்சல் - 2 தொடர் 7.23 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாம் இடத்தைப் பிடித்த நிலையில், அய்யனார் துணை தொடர் 4.38 புள்ளிகளைப் பெற்று டிஆர்பியில் பின்தங்கியுள்ளது.

இது அய்யனார் துணை தொடரின் முதல் வார டிஆர்பி மட்டுமே, இனி வரும் வாரங்களில் இத்தொடரின் டிஆர்பியில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT