மகா கும்பமேளாவுக்கு சத்தீஸ்கரில் இருந்து பக்தர்கள் சென்ற கார் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியாகினர்.
சத்தீஸ்கரில் இருந்து மகா கும்பமேளாவில் பங்கேற்க சென்றவர்களின் கார் மீது பேருந்து மோதிய விபத்தில், காரில் பயணித்த 10 பேர் பலியாகினர்.
பிரயாக்ராஜ் - மிர்சாபூர் நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஸ்வரூப ராணி மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளன.
பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாக யமுனாநகர் காவல் துறை ஆணையர் விவேக் சந்திரா யாதவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அமெரிக்க விமானங்கள் அமிருதசரஸ் வருவது ஏன்? பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தனது இரங்களை தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளை துரிதப் படுத்துமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.