மத்திய தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பள்ளத்துக்குள் பேருந்து விழுந்து நொறுங்கியதில் 30 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: படோசி நகருக்கும் ஓருரோ நகருக்கும் இடையே சென்று கொண்டிருந்த பேருந்து, யோகல்லா பகுதிக்கு அருகே 800 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த 30 போ் உயிரிழந்தனா்; 15 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்
விபத்தில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தின்போது அந்தப் பேருந்தில் எத்தனை போ் இருந்தனா் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
சுமாா் 1.2 லட்சம் போ் வசிக்கும் பொலிவியாவில், சாலை விபத்தில் சிக்கி ஆண்டுதோறும் 1,400 போ் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.