கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

காவல் வாகனத்தின் மீது குண்டு வீச்சு! தீவிரவாதி சுட்டுக்கொலை!

பாகிஸ்தானில் காவல் வாகனத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதைப் பற்றி...

DIN

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் காவலர்களின் வாகனத்தின் மீது குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒரு தீவிரவாதி காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

கோஹாட் மாவட்டத்தின் ஷாதிப்பூர் பகுதியில் அந்நாட்டு காவல் துறைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகங்கள் இன்று (பிப்.18) தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டதுடன், காவலர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க:வாஷிங்டனில் டிரம்ப், எலானுக்கு எதிராகப் போராட்டம்!

மேலும், இந்த தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து ஏராளமான கையெறி குண்டுகளும் மற்ற ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த தாக்குதலுக்கு காரணமான மற்ற தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 2024 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய 444 தாக்குதல்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 685 பேர் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

42 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற நியூசிலாந்து!

அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

கிண்டியில் 118 ஏக்கர் பரப்பில் மாபெரும் சுற்றுச்சூழல் பூங்கா: பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்!

ஸ்லிம் இன் ஸ்ட்ரீட்... அனுபமா அக்னிஹோத்ரி!

பார்வையில் இழந்தேன்... அம்ருதா பிரேம்!

SCROLL FOR NEXT