மாநில மனித உரிமைகள் ஆணையம் 
தற்போதைய செய்திகள்

சுகாதார நிலையங்களில் மூத்த மருத்துவர்கள் 24*7 பணியில் இருக்க வேண்டும்! - மனித உரிமைகள் ஆணையம்

தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க உத்தரவு.

DIN

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2019-ல் திருவண்ணாமலையைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலி ஏற்பட்டு அருகிலுள்ள மாம்பாக்கம் அரசு சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தபினனர் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர் ஆரணி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த மனித உரிமைகள் ஆணையம், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ. 5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக வழக்கில் இன்று, கர்ப்பிணிகளுக்கு முறையாக சிகிச்சையளிக்க தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பயிற்சி பெற்ற மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருக்க வேண்டும் என மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் உத்தரவிட்டுள்ளார். 108 ஆம்புலன்ஸும் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மூத்த மருத்துவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சுகாதார நிலையங்களில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT