கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் படுகாயம்!

ஜம்முவில் கண்ணிவெடி விபத்தில் இந்திய வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளதைப் பற்றி...

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்த கண்ணிவெடி விபத்தில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைக் கோடு உள்ள நாங்கி-தகேரி பகுதியில் இன்று காலை 10.50 மணியளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ஒருவர், கண்ணிவெடியின் மீது எதிர்பாராதவிதமாக கால் வைத்தார். இதனால், அந்த வெடியானது தூண்டப்பட்டு வெடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பிரதமர் மோடியுடன் ரேகா குப்தா சந்திப்பு!

முன்னதாக, சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் அண்டை நாடுகளிலிருந்து பிறர் நுழைவதைத் தடுப்பதற்காக, எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்ணிவெடிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் பொருத்தப்பட்டுள்ளன.

சில சமயம் அங்கு பெய்யும் மழையில் அவை அடித்து வரப்படுவதினால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிரம்ப் - புதின் திடீர் சந்திப்பு!

ரஷிய அதிபர் புதினுடன் அஜித் தோவல் சந்திப்பு!

எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம்?

டெவான் கான்வே, வில் யங் அரைசதம்: வலுவான நிலையில் நியூசிலாந்து!

அயர்லாந்தில் இந்திய சிறுமி மீது இனவெறித் தாக்குதல்!

SCROLL FOR NEXT