தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

DIN

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று(பிப்., 24) அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.

அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,

"ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கமுள்ள தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரவலாகப் போற்றப்படுகிறார்.

பல சந்தர்ப்பங்களில் அவருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நல முயற்சிகளுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 29,540 கனஅடியாக அதிகரிப்பு

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: அருவிகளில் குளிக்க, பரிசல் இயக்கத் தடை

பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு: வயநாடு பணிகளுக்கு ரூ.2,220 கோடி விடுவிக்க கோரிக்கை

கடகத்துக்கு லாபம்: தினப்பலன்கள்!

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரவு மீண்டும் சரிவு

SCROLL FOR NEXT