கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

மத்தியப் பிரதேசத்தில் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டியதைப் பற்றி...

DIN

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலுள்ள கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டதினால் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.

இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் அரசு அறிவியல் கல்லூரியில், மாணவர்களால் ஒருகிணைக்கப்பட்டு வருகின்ற மார்ச்.7 அன்று ஹோலி கலைநிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. நுழைவுக்கட்டணமாக ரூ.150 நிர்ணயிக்கப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஹோலி நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்ததுடன் அதனை மொத்தமாக ரத்து செய்ததினால் கோவமடைந்த மாணவர் தலைவர்கள் சிலர் நேற்று (பிப்.24) அங்குள்ள அறையில் கூடியிருந்த ஆசிரியர்களை உள்ளே வைத்து வெளியே தாழிட்டு பூட்டியுள்ளனர்.

மேலும், அந்த அறையினுள் மின்சாரத்தையும் துண்டித்த அவர்கள் ஆசிரியர்களை நோக்கி கோஷங்களை எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: 119 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

இந்நிலையில், சுமார் அரை மணிநேரம் அந்த அறையினுள் பூட்டப்பட்டிருந்த கல்லூரி பணியாளர்களில் ஒருவர் அந்த அறையின் ஜன்னல் வழியாக வெளியே வந்து அந்த பூட்டை திறந்து ஆசிரியர்களை விடுவித்துள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட நிர்வாகத்திடம் அக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் அனாமிகா ஜெயின் புகாரளித்துள்ளார். அதற்கு பதிலளித்த அம்மாவட்ட உயர் அதிகாரி அஷிஷ் சிங் சம்பந்தப்பட்ட மாணவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

இருப்பினும், தற்போது வரை இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் எந்தவொரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

அசோக் லேலண்ட் விற்பனை 8% உயா்வு

SCROLL FOR NEXT