சிறப்பு அலங்காரத்தில் பூவனூர் சதுரங்கவல்லபநாதர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர். 
தற்போதைய செய்திகள்

ஆலங்குடி குருபரிகார கோயிலில் மகாசிவராத்திரி வழிபாடு

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் நீடாமங்கலம் அருகேயுள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோவிலில் மகாசிவராத்திரி வழிபாடு புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு ஆபத்சகாயேஸ்வரர்,ஏலவார் குழலியம்மன் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இக்கோயிலில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை அதிகாலை வரை குறிப்பிட்ட இடைவெளியில் நான்குகால பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகேயுள்ள பூவனூர் கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லப நாதர் கோயில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோயில், கொட்டையூர் அகஸ்தீஸ்வரர் கோயில், அரவூர் மங்களாம்பிகை சமேத கார்கோடகேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் மகாசிவராத்திரி விழாவையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக ஆட்சியில் மட்டுமே வளர்ச்சி சாத்தியம்: அமித் ஷா

தமிழ் அடையாளத்திற்கு முன்பு வேறு எந்த அடையாளமும் நிற்க முடியாது: துணை முதல்வர் உதயநிதி

சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

நியூசிலாந்து பேட்டிங்: 6 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்திய அணி!

பல்கலை. தரவரிசையில் முதல் 500 இடங்களில் இந்தியா இல்லை: பிரதமர் மீது குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT