முதல்வர் ஸ்டாலின். 
தற்போதைய செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

2023-2024-ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு  மிகை ஊதியம் வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க ரூ. 163.81 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திவரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத் திட்டங்களைக் கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்க்க அயராது உழைத்திடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கலையொட்டி, 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.163.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்து  உத்தரவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இதையும் படிக்க: நடிகர் எஸ்.வி. சேகரின் சிறைத்தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம்

இந்த உத்தரவின்படி, 

1) ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ. 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும். 

2) தொகுப்பூதியம், சிறப்புக் கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள், மற்றும் 2023-2024-ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாள்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லறைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூபாய் 1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.   

3) "சி" மற்றும் "டி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்துவகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடாவில் விமானப் பணியாளர்களின் போராட்டம் முடிவு!

சௌதி சூப்பர் கோப்பையில் சர்ச்சை: அல்-நாஸர் வீரருக்கு ரெட் கார்டு!

கண்கள் நீயே... மாளவிகா மனோஜ்!

அந்தி மாலை நேரம்... ஷெரின்!

பேன்ட் பாக்கெட்டில் போன்... மடியில் லேப்டாப் வைத்தால்? -ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

SCROLL FOR NEXT