திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சோதனை மேற்கொண்டு வரும் அமலாக்கத் துறையினர்.  
தற்போதைய செய்திகள்

திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத் துறை சோதனை

அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

DIN

வேலூர்: கீழ்மோட்டூரில் அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத் துறை அலுவலர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கதிர் ஆனந்த் வீட்டில் 50-க்கும் மேற்பட்ட அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று துரைமுருகன் ஆதரவாளர் காட்பாடி பள்ளிகுப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக பூஞ்சோலை சீனிவாசன் சிமென்ட் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.11 கோடியை வருமானவரித் துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சநேயர்!

ஆஷஸ்: சொந்த மண்ணில் வரலாறு படைத்த டிராவிஸ் ஹெட்!

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு! வந்தே மாதரம் இசைக்கப்பட்டு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT