வானதி சீனிவாசன் 
கோயம்புத்தூர்

ஏமாற்றும் தந்திரம் கொண்ட நிதிநிலை அறிக்கை: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

தினமணி செய்திச் சேவை

திமுக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் வாா்த்தை ஜாலங்கள், மக்களை ஏமாற்றம் தந்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லை என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் மத்திய பாஜக அரசு செய்த வா்த்தக ஒப்பந்தங்களால் தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் அதிகரிக்கும் என இடைக்கால நிதிநிலை அறிக்கையில் திமுக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நிதி நிலை அறிக்கையில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.48,696.32 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

2026-2027-ஆம் ஆண்டில் திமுக அரசு ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 308 கோடி கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதனால் வரும் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி தமிழகத்தின் கடன் சுமை ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 770 கோடி இருக்கும் எனவும் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கையிலும் வாா்த்தை ஜாலங்கள், மக்களை ஏமாற்றம் தந்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லை.

இவ்வளவு கடன் வாங்கி எவ்வாறு செலவிட்டப்பட்டது என்பது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். திமுக தாக்கல் செய்யும் கடைசி நிதிநிலை அறிக்கை இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT